ADDED : ஏப் 21, 2025 03:18 AM
திருச்சூர் : கேரளாவில் வளர்ப்பு நாய், வீட்டுக்குள் அடிக்கடி நுழைவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நாயின் உரிமையாளரை பக்கத்து வீட்டு நபர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள வெள்ளிகுளங்கரா பகுதியைச் சேர்ந்தவர் ஷிஜோ, 42. இவர், தன் வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். இது அடிக்கடி அண்டை வீட்டினரின் தோட்டத்திற்கு சென்று வந்தது. இது குறித்து அந்த வீட்டைச் சேர்ந்த ஜோசப், 69, என்ற முதியவருக்கும், ஷிஜோவுக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஷிஜோவின் நாய், ஜோசப் வீட்டின் தோட்டத்திற்கு சென்றது. இதனால் ஏற்பட்ட சண்டை அடிதடி வரை சென்றது. அப்போது வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்த ஜோசப், ஷிஜோவை சரமாரியாக குத்தினார். இதில் அவர் படுகாயம்அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஷிஜோ ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து, ஜோசப்பை போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.

