ADDED : ஏப் 20, 2024 10:42 PM

மும்பை: நடக்க உள்ள லோக்சபா தேர்தல், குடும்ப உறவுகளுக்கு இடையேயான தேர்தல் அல்ல, பிரதமர் மோடிக்கும்,ராகுலுக்கும் இடையேயானது என மஹாரஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் கூறினார்.
மஹாராஷ்டிராவில் சரத்பவாரின் தேசியவாத காங்., கட்சி இரண்டாக உடைந்தது. இதில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சியே உண்மையானது என தேர்தல் ஆணையம் கூறியது.
இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் பாரமதி தொகுதியில் சரத்பவாரின் கட்சி சார்பில் சுப்ரியா சுலேவும், அஜித்பவாரின் தேசியவாத காங்., கட்சி சார்பில் அஜித்பவார் மனைவி சுனித்ராவும் போட்டியிடுகிறார்.
இது குறித்து அஜித்பவார் கூறியது, மஹாராஷ்டிராவின் பாரமதி லோக்சபா தொகுதியில் நடக்கும் போட்டி, குடும்ப உறவுகளுக்கு இடையேயானது கிடையாது. இங்கு நடக்கும் போட்டி, மோடியா அல்லது ராகுலா என்பதற்கானது. இந்த தொகுதிக்கு நான் நிறைய செய்துள்ளேன். இவ்வா அவர்கூறியுள்ளார்,

