ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல்: தெலுங்கானாவில் அதிகாரிகள் நடவடிக்கை
ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல்: தெலுங்கானாவில் அதிகாரிகள் நடவடிக்கை
ADDED : நவ 05, 2025 03:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத்: தெலுங்கானாவில் மதுவிலக்கு, கலால்துறை நடத்திய வாகன சோதனையில் ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள 192 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவா, டில்லி மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து இருந்து விமானம் மூலம் சட்டவிரோதமாக வரி செலுத்தப்படாத மதுபானங்கள் கொண்டு வரப்பட்டு கள்ள சந்தையில் விற்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, பஹாடிஷெரிப் குறுக்கு வழியில் மதுவிலக்கு, கலால்துறை அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடத்தினர்.
இந்த சோதனையில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள 192 பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

