சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டி: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் அறிவிப்பு
சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டி: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் அறிவிப்பு
ADDED : ஆக 05, 2025 08:37 PM

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் , வருகின்ற பீஹார் சட்டப்பேரவை தேர்தலில், 5 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
பீஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு, தனது மூத்த மகன் தேஜ் பிரதாப். இவர் கடந்த மே 24, 2025 அன்று, அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் பேஸ்புக்கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், அதில் அவர்கள் 12 வருடங்களாக காதல் உறவில் இருந்ததாகக் கூறினார். இதனை தொடர்ந்து லாலு, தேஜ் பிரதாபை குடும்பத்திலிருந்தும் கட்சியிலிருந்தும் அதிரடியாக நீக்கினார். இதனை தொடர்ந்து பீஹார் சட்டமன்ற தேர்தலில் 5 சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தேஜ் பிரதாப் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.
விகாஸ் வஞ்சித் இன்சான் கட்சி (விவிஐபி), போஜ்பூரியா ஜன் மோர்ச்சா (பிஜேஎம்), பிரகதிஷீல் ஜனதா கட்சி (பிஜேபி), வாஜிப் அதிகார் கட்சி (டபிள்யூஏபி) மற்றும் சன்யுக்த் கிசான் விகாஸ் கட்சி (எஸ்கேவிபி) ஆகிய 5 சிறிய கட்சிகளுடன் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றதேர்தலில், மஹூவா தொகுதியில் போட்டியிடுவேன்.
இவ்வாறு தேஜ் பிரதாப் கூறினார்.

