2038ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக மாறும்:ஆய்வறிக்கையில் தகவல்
2038ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக மாறும்:ஆய்வறிக்கையில் தகவல்
ADDED : ஆக 28, 2025 04:37 PM

புதுடில்லி: 2038ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா பொருளாதாரம் குறித்து, சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஈஒய் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்தியப் பொருளாதாரம், வரும் 2038ம் ஆண்டுக்குள் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 34.2 டிரில்லியன் டாலர்களாக உயரும். இந்தச் சாதனை வரலாற்றைச் சாதனையாக இருக்கும். இந்தச் சாதனை மக்கள் தொகை அதிகரிப்பால் மட்டும் வரவில்லை, வலுவான கட்டமைப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள் தான் காரணம்.
இந்தியாவின் பொருளாதாரம் 2030ம் ஆண்டுக்குள் 20.7 டிரில்லியன் டாலர்களை எட்டும்.அமெரிக்காவின் புதிய வர்த்தக வரிகள் இந்திய ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை எளிதில் கட்டுப்படுத்தி விடலாம். இந்தியா தனது வளர்ச்சிப் பாதையை உறுதிப்படுத்த, பல முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகள் மற்றும் தொலைநோக்குச் சீர்திருத்தங்கள், இந்தியாவை ஒரு நிலையான மற்றும் சக்திவாய்ந்த பொருளாதாரமாக மாற்றும். இந்தியாவின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.இந்தியர்கள் அதிக அளவில் சேமித்து முதலீடு செய்கின்றனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைகிறது. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.