ஜூன்01-ல் கூடுகிறது ‛இண்டியா ' கூட்டணி கூட்டம்: மம்தா, கெஜ்ரிவால் பங்கேற்பது சந்தகேம்
ஜூன்01-ல் கூடுகிறது ‛இண்டியா ' கூட்டணி கூட்டம்: மம்தா, கெஜ்ரிவால் பங்கேற்பது சந்தகேம்
UPDATED : மே 27, 2024 07:41 PM
ADDED : மே 27, 2024 07:29 PM

புதுடில்லி: பரபரப்பான தேர்தல் சூழ்நிலையில் ‛‛ இண்டியா'' கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் ஜூன் 01-ம் தேதி கூடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழுகட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற லோக்சபா தேர்தலில் இதுவரை ஆறு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.இறுதி கட்டமான ஏழாம் கட்ட தேரத்ல் 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 01 நடக்கிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து அமைத்துள்ள‛‛ இண்டியா '' கூ்டடணி கட்சி தலைவர்களின் கூட்டம் வரும் ஜூன் 01-ம் தேதி டில்லியில் கூடி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் திரிணமுல் காங்., கட்சியின் மம்தா பங்கேற்பது குறித்தும், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்திற்காக நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவர் ஜூன் 01- ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்ப உள்ளதால் அவர் பங்கேற்பதும் சந்தேகம் என கூறப்படுகிறது. ஜாமினை நீட்டிக்க கோரி கோர்ட்டில் மனு செய்துள்ளதாக அதன் முடிவை கெஜ்ரிவால் எதிர்நோக்கி உள்ளார்.

