ADDED : ஆக 26, 2025 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : மத்திய அரசு அதன் பணவீக்க அளவீட்டை புதுப்பிக்க திட்டமிட்டு உள்ளது.
மாறிவரும் நுகர்வோர் பழக்கவழக்கங்களை பிரதிபலிக்கும் வகையில், 'அமேசான்' மற்றும் 'பிளிப்கார்ட்' போன்ற மின்னணு வணிக தளங்களில் இருந்து விலை நிலவரம் குறித்த தரவுகளைப் பெற மத்திய புள்ளியியல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
வீட்டு செலவினங்களில் அவற்றின் பங்கு உயரும்போது, 'ஆன்லைன்' தளங்களின் விலை நிலவரத்தை கணக்கிடுவதன் வாயிலாக இந்தியாவின் சில்லரை பணவீக்க குறியீட்டை மேலும் வலுவானதாக மாற்ற இந்நடவடிக்கை உதவும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 12 நகரங்களில் உள்ள, 'இ - காமர்ஸ்' தளங்களில் இருந்து இந்த தரவுகளை சேகரிக்க துவங்கியுள்ளதாக அமைச்சகத் தின் செயலர் சவுரப் கார்க் தெரிவித்துள்ளார்.