ADDED : ஆக 13, 2025 03:07 PM

புதுடில்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் 21ம் தேதி ரஷ்யா செல்ல உள்ளார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஷ்யா சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். தொடர்ந்து, விளாடிமிர் புடின் விரைவில் இந்தியா வர உள்ளார் என்றார்.
இச்சூழ்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 21ம் தேதி மாஸ்கோ செல்ல உள்ளார். அங்கு, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை சந்தித்து பேச உள்ளார். அமெரிக்கா வரி விதித்துள்ள சூழ்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.