சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்
சாவர்க்கர் குறித்து அவதூறு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்
ADDED : ஜூலை 24, 2025 08:36 PM

மும்பை: பாரத் ஜோடோ யாத்திரையின்போது, சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு நாசிக் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
கடந்த 2022ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது மஹாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தேவேந்திர புதாதா என்பவர் நாசிக் நீதிமன்றத்தில் அவதூறு ஐபிசி பிரிவு 500,504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.
இது கூடுதல் தலைமை ஜூடிசியர் மாஜிஸ்திரேட் ஆர் சி நர்வாடியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வீடியோ கான்பரன்சிங் மூலம் ராகுல் நேரில் ஆஜரானார். அப்போது, தான் எந்த குற்றமும் செய்யவில்லை என ராகுல் தெரிவித்தார். தொடர்ந்து அவரது வழக்கறிஞர், ' ராகுலுக்கு ஜாமின் வழங்க வேண்டும்,' என வாதிட்டார்.
இதனை ஏற்று ரூ.15 ஆயிரம் பிணையில் ராகுலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.