UPDATED : ஆக 18, 2025 05:18 PM
ADDED : ஆக 18, 2025 03:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தேஜ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
ஜக்தீப் தன்கர் ராஜினாமா காரணமாக காலியாக உள்ள துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ம் தேதி நடக்க உள்ளது. இதில் தேஜ கூட்டணி வேட்பாளராக மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று( ஆகஸ்ட் 18) டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.