சீனா மீது கூடுதல் வரி விதிக்க ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு: காரணம் சொல்கிறது அமெரிக்கா
சீனா மீது கூடுதல் வரி விதிக்க ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு: காரணம் சொல்கிறது அமெரிக்கா
ADDED : ஆக 18, 2025 04:50 PM

வாஷிங்டன்: '' ரஷ்யாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, அதனை சுத்திகரிப்பு செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்கிறது. இதனால், கூடுதல் வரி விதிப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன, '' என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
இந்தியப் பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீத வரி விதித்தது. ஆனால், இந்தியாவை காட்டிலும் ரஷ்யாவிடம் கூடுதலாக கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ கூறியதாவது: சீனாவிற்கு செல்லும் பெரும்பாலான கச்சா எண்ணெய், அங்கு சுத்திகரிக்கப்பட்டு, பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் இன்னும் இயற்கை எரிவாயுவை வாங்கி வருகின்றன. பல நாடுகள் நிறுத்தி உள்ளன. இன்னும் பல நாடுகள் சொந்தமாக தடை விதித்துக் கொள்ள முடியும்.
கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்றால், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவை தான் சொல்வார்கள். சீனா, அந்த கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்கிறது. இதற்கு கூடுதல் வரி விதித்தால், வாங்குபவர்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டும். சீனா மீது கூடுதல் வரி விதிக்க அந்நாட்டிடம் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.