சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் விவகாரம் உதவி கல்வி அதிகாரி உட்பட 9 பேர் கைது
சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் விவகாரம் உதவி கல்வி அதிகாரி உட்பட 9 பேர் கைது
ADDED : செப் 18, 2025 02:43 AM
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் காசர்கோடு அருகே 16 வயது மாணவனுக்கு மூன்று ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த உதவி கல்வி அதிகாரி உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து உதவி கல்வி அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
காசர்கோடு அருகே சந்தேரா பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ் 1 மாணவன் டேட்டிங் செயலியில் தன் பெயரை பதிவு செய்தார். அதையடுத்து கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சிறுவனை தொடர்பு கொண்டு அவருடைய வீட்டில் வைத்தும், பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சிறுவனின் தாயார் அளித்த புகாரின்படி சந்தேரா மற்றும் நீலேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் உள்ளூர் அரசியல் தலைவர்கள் முதல் அரசு உயர் அதிகாரிகள் உட்பட 16 பேருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இவர்களில் சைனுதீன் 52, முகம்மது ரம்சான் 64, சித்ராஜ் 48, குஞ்ஞகமது 55, அப்சல் முகம்மது 23, நாராயணன் 60, ரயீஷ் அகமது 30, சுகேஷ் 30, சுஜித் 36, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் சைனுதீன் காசர்கோடு உதவி கல்வி அலுவலராக உள்ளார். இவர் உடனடியாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சித்ராஜ் ரயில்வே ஊழியர். இச்சம்பவத்தில் தொடர்புடைய முஸ்லிம் லீக் கட்சி பிரமுகரான சிராஜுதீனை 36, கைது செய்ய போலீசார் வீட்டுக்கு சென்ற போது அவர் தப்பி விட்டார். இதில் தொடர்புடைய மேலும் ஏழு பேரை பிடிக்க தனிப்படையினர் தீவிரமாக தேடி வரு கின்றனர்.
சிறுவன் எட்டாம் வகுப்பு படித்த போதே இந்த வலையில் சிக்கிக் கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.