ADDED : ஜூலை 30, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: ''சித்தராமையா, எடியூரப்பா, மல்லிகார்ஜுன கார்கே, குமாரசாமி என, பலருக்கும் தங்கள் பிள்ளைகளை பற்றிய சிந்தனை அதிகம். மற்றவர்களின் பிள்ளைகளை வளர்ப்பது யார்?'' என பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா கேள்வி எழுப்பினார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
எடியூரப்பா, சித்தராமையா, தேவகவுடா, மஹாதேவப்பா, மல்லிகார்ஜுன கார்கே, குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள், அடிமட்டத்தில் இருந்து வளர்ந்த தலைவர்கள். அடுத்த சந்ததியினருக்கு இவர்கள் என்ன கொடுத்தனர் என்பது, கேள்விக்குறி.
மற்றவரின் பிள்ளைகளை வளர்த்த தேவராஜ் அர்ஸ், கடவுள் ஆனார். ஆனால் சித்தராமையா, எடியூரப்பா, மல்லிகார்ஜுன கார்கே, குமாரசாமி உட்பட பலர், தங்கள் பிள்ளைகளை பற்றியே சிந்திக்கின்றனர். அடுத்தவரின் பிள்ளைகளை வளர்ப்பது யார்?
இவ்வாறு அவர் கூறினார்.

