தட்சிண கன்னடா மாவட்ட ம.ஜ.த.,வினர் காங்.,கில் ஐக்கியம்
தட்சிண கன்னடா மாவட்ட ம.ஜ.த.,வினர் காங்.,கில் ஐக்கியம்
ADDED : ஏப் 17, 2024 05:20 AM

தட்சிண கன்னடா, : பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.ஜ.த.,வை சேர்ந்த 47 பேர் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று காங்கிரசில் இணைந்தனர்.
லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து உள்ளது. ம.ஜ.த.,வின் செல்வாக்கை குறைக்க, காங்கிரஸ், 'ஆப்பரேஷன் கை' நடத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், சென்னபட்டணாவை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ம.ஜ.த.,வினர், சிவகுமார் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
இந்நிலையில், தட்சிண கன்னடா மாவட்டத்தின் ம.ஜ.த.,வை சேர்ந்த 47 பேர், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஹரிஷ் குமார், முன்னாள் அமைச்சர் வினய்குமார் சொரக்கே முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தனர்.
இது குறித்து வினய் குமார் சொரக்கே கூறுகையில், ''காங்கிரசில் இன்று இணைந்தவர்கள், கட்சி வளர்ச்சிக்கு கடுமையாக உழைக்க வேண்டும். வரும் நாட்களில் தாலுகா அளவிலான மாற்று கட்சியினர், காங்கிரசில் இணைய உள்ளனர்,'' என்றார்.

