ADDED : ஏப் 16, 2024 05:30 AM
மைசூரு, : பா.ஜ., வேட்பாளர் யதுவீர் மாநாடு நடத்திய இடத்தில், துாய்மை செய்யும் பணிகள் நடந்தன. இதில் அவரது மனைவி திரிஷிகாவும் பங்கேற்றது மக்களை கவர்ந்தது.
லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக மன்னர் குடும்பத்தின் யதுவீர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பிரசாரம் செய்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் மைசூரு வந்திருந்தார். நகரின் மஹாராஜா கல்லுாரி மைதானத்தில், பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்த நிலையில், மைதானம் முழுதும் பெருமளவில் குப்பை குவிந்து கிடந்தன. நேற்று காலையில், துப்புரவு பணிகள் நடந்தன. யதுவீரின் மனைவி திரிஷிகா குமாரியும், மைதானத்தில் குப்பையை அள்ளி சுத்தம் செய்தார்.
அரச குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், சாதாரண மக்களை போன்று எளிமையாக நடந்து கொண்டதுடன், மைதானத்தில் துப்புரவு செய்ததுஅனைவரையும் கவர்ந்தது.

