கொலையாளிகள் 'என்கவுன்டர்' அமைச்சர் சந்தோஷ் லாட் ஆவேசம்
கொலையாளிகள் 'என்கவுன்டர்' அமைச்சர் சந்தோஷ் லாட் ஆவேசம்
ADDED : ஏப் 20, 2024 05:14 AM

ஹூப்பள்ளி : ஹூப்பள்ளியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் நேற்று அவர் கூறியதாவது:
கொலை சம்பவங்கள் அரசியல் விஷயம் அல்ல. தேவையின்றி கருத்து தெரிவிப்பதற்கு பதில், மகளை இழந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தைரியப்படுத்துவது, பாராட்டக்கூடிய விஷயமாக இருக்கும்.
கல்லுாரி மாணவி கொலை சம்பவத்தை, நான் வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய சம்பவங்கள், சமுதாயத்தை தலை குனிய வைப்பதாகும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல், பார்த்து கொள்ள வேண்டும். கொலை போன்ற கொடூர செயலை செய்வோரை, என்கவுன்டர் செய்யும் சட்டத்தை கொண்டு வருவது குறித்து, அரசு ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
இதற்கிடையில், மாணவி நேஹாவை கொலை செய்த பயாஸ் தலையை வெட்டினால், 10 லட்சம் ரூபாய் பரிசளிப்பதாக, ஜெய கர்நாடகா அமைப்பு அறிவித்துள்ளது.
அமைப்பின் தலைவர் இஜாரி கூறியதாவது:
ஹூப்பள்ளி காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன் ஹிரேமத்தின் மகள் நேஹா கொலையை கண்டித்து, கொலையாளியை கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி, இன்று ஹூப்பள்ளி பந்த் நடத்துவோம். யார் வீட்டில் பெண் குழந்தைகள் உள்ளார்களோ, அவர்கள் எங்களின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.
பந்த்தை முன்னிட்டு, பி.வி.பி., கல்லுாரியில் இருந்து, ஊர்வலம் நடத்துவோம். மாணவியை கொன்ற பயாஸ் தலையை வெட்டுவோருக்கு எங்கள் அமைப்பு சார்பில், 10 லட்சம் ரூபாய் பரிசளிப்போம்.
இவ்வாறு அவர்கூறினார்.

