ADDED : மார் 23, 2024 06:44 AM
சித்ரதுர்கா: சித்ரதுர்கா, ஹிரியூரின், பரமகிரி கிராமத்தினர் நேற்று குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
எங்கள் கிராமத்தில் ஏரி வற்றி விட்டது. சுற்றுப்புற விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. விவசாயிகளால், தங்களின் தோட்டத்தை காப்பாற்ற முடியவில்லை.
வாணிவிலாஸ்புரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பரமகிரி, பளகட்டா, தளவாரட்டி, அகளேரஹட்டி, கக்கைய்யன ஹட்டி, குன்டப்பனஹட்டி கிராமங்களில் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எங்கள் கிராமத்தில் இருந்து, மூன்று, நான்கு கி.மீ., துாரம் உள்ள வாணி விலாஸ் அணையில் இருந்து, தண்ணீர் கொண்டு வர வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றா விட்டால், லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

