செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / தர்ஷன் செய்திக்கு பாக்ஸ்... / தர்ஷன் செய்திக்கு பாக்ஸ்...
/
செய்திகள்
தர்ஷன் செய்திக்கு பாக்ஸ்...
ADDED : ஜூன் 21, 2024 05:44 AM
தர்ஷனை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது: தர்ஷன், வினய், பிரதோஷ், தன்ராஜ் ஆகிய நான்கு பேரும், விசாரணையின் போது சரியாக ஒத்துழைக்கவில்லை. அவர்களிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளது. தர்ஷன் வீட்டில் கடந்த 19ம் தேதி நடத்திய சோதனையின் போது 37.40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இந்த பணத்திற்கு உரிய பதிலை அவரிடம் இருந்து பெற வேண்டும். பிரதோஷ் சாட்சியங்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். ரேணுகாசாமியின் உடல் மீது மின்சாரம் பாய்ச்சுவதற்கு தேவையான பொருட்களை எங்கு வாங்கினோம் என்று கூறாமல், தன்ராஜ், வினய் உண்மைகளை மறைக்கின்றனர். எனவே, அவர்களை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.