ADDED : ஏப் 08, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாசன்: மதுபான தொழிற்சாலையில் சோதனையிட்ட கலால்துறை அதிகாரிகள் 9.50 கோடி ரூபாய் மதிப்புள்ள பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஹாசன் நகரில் உள்ள மதுபான தொழிற்சாலை ஒன்றில், வரி கட்டாமல், சட்டவிரோதமாக பெருமளவில் மதுபானம் பதுக்கி வைத்துள்ளதாக, கலால் துறைக்கு தகவல் வந்தது.
கலால் துறை அதிகாரிகள், நேற்று மதியம் அந்த தொழிற் சாலைக்கு சென்று சோதனை நடத்தினர். 56,236 பாக்ஸ்களில் பதுக்கப்பட்ட 5 லட்சத்து 63 ஆயிரத்து 756 லிட்டர் பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 9.50 கோடி ரூபாய்.

