ADDED : மார் 26, 2024 09:29 PM

தாவணகெரே : அரசு உருது பள்ளிக்குள் நுழைந்த குரங்கு, அங்கிருந்த நான்கு மாணவர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தாவணகெரே மாவட்டம், சந்தேபென்னுாரில் அரசு உருது பள்ளி உள்ளது. நேற்று மதியம் உணவு இடைவேளையில் குரங்கு ஒன்று பள்ளிக்குள் நுழைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டது.
இதை பார்த்த மாணவர்கள், குதுாகலம் அடைந்தனர். முதலில் மாணவர்களுடன் விளையாடி கொண்டிருந்த குரங்கு, அவர்கள் மீது பாய்ந்து பிராண்டியது. மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.
சில மாணவர்களை கடித்து காயப்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஆசிரியர்கள், ஊழியர்கள், குரங்கை விரட்டி அடித்தனர். காயமடைந்த மாணவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கோபமடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினரிடம் முறையிட்டனர்.
அவர்களும், குரங்கை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு, வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்று சம்பவம் நடப்பது முதல் முறையல்ல.
மூன்று மாதங்களுக்கு முன் இப்பகுதியில் தென்பட்ட குரங்கு, அரசு உருது பள்ளிக்குள் நுழைந்துள்ளது. அப்போது மாணவர்கள், குரங்கை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
அரசு உருது பள்ளிக்குள் நுழைந்து, நாற்காலியில் அமர்ந்திருந்த குரங்கு. இடம்: தாவணகெரே.

