/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்கு சந்தை நிலவரம்: ஏழாவது நாளில் ஏற்பட்ட சரிவு
/
பங்கு சந்தை நிலவரம்: ஏழாவது நாளில் ஏற்பட்ட சரிவு
UPDATED : ஆக 23, 2025 01:12 PM
ADDED : ஆக 23, 2025 12:35 AM

ஏழாவது நாளில் ஏற்பட்ட சரிவு
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின. தொடர்ந்து, எச்.டி.எப்.சி., ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றனர்.
இதனால், கடந்த ஆறு நாட்கள் சந்தை குறியீடுகள் கண்ட உயர்வு, ஏழாவது நாளில் தடைபட்டது. அன்னிய முதலீடுகள் மீண்டும் வர துவங்கினாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால், நேற்று நாள் முழுதும் சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின. முடிவில், நிப்டி, சென்செக்ஸ் தலா, 1 சதவீதம் அளவுக்கு சரிவுடன் முடிவடைந்தன.
உலக சந்தைகள்
வியாழனன்று அமெரிக்க சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளில், ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
சரிவுக்கு காரணங்கள்
1 முன்னணி நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்றது
2 அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவை கண்டது.
![]() |
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,623 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.24 சதவீதம் குறைந்து, 67.52அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 பைசா சரிந்து, 87.52 ரூபாயாக இருந்தது.