/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஜி.எஸ்.டி., வசூல் 6.50% உயர்வு
/
ஜி.எஸ்.டி., வசூல் 6.50% உயர்வு
UPDATED : செப் 02, 2025 11:55 AM
ADDED : செப் 01, 2025 11:14 PM

புதுடில்லி: கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், சென்ற மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல், 6.50 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிபரம்:
கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி., வசூலானது. அது, கடந்த மாதத்தில், 1.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. எனினும், முந்தைய மாதமான ஜூலையில் வசூலிக்கப்பட்ட 1.96 லட்சம் கோடி ரூபாயை விட, இது குறைவு.
அமல்படுத்தப்பட்ட எட்டு ஆண்டுகளில், கடந்த ஏப்ரல் மாதத்தில் தான், அதிகபட்சமாக 2.37 லட்சம் கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி., வசூலாகிஇருந்தது.
ஜி.எஸ்.டி.,யின் நான்கு அடுக்குகளை இரண்டு அடுக்குகளாக குறைப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதுபற்றியும் விவாதிக்க, வரும் 4ம் தேதி நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்துக்கு இரண்டு நாட்கள் முன், ஆகஸ்ட் மாத வரி வசூல் புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.