/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நிர்வாக முறைகேடு குற்றச்சாட்டு சோழமண்டலம் பைனான்ஸ் மறுப்பு
/
நிர்வாக முறைகேடு குற்றச்சாட்டு சோழமண்டலம் பைனான்ஸ் மறுப்பு
நிர்வாக முறைகேடு குற்றச்சாட்டு சோழமண்டலம் பைனான்ஸ் மறுப்பு
நிர்வாக முறைகேடு குற்றச்சாட்டு சோழமண்டலம் பைனான்ஸ் மறுப்பு
ADDED : டிச 24, 2025 01:16 AM

புதுடில்லி: முருகப்பா குழுமத்தை சேர்ந்த 'சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்டு பைனான்ஸ்' நிறுவனம், அதன் மீதான நிர்வாக முறைகேடு குற்றச்சாட்டுகளை உள்நோக்கம் கொண்டவை என கூறி மறுத்துள்ளது.
'கோப்ராபோஸ்ட்' என்ற இணையதளம், சோழமண்டலம் உள்ளிட்ட முருகப்பா குழுமத்தை சேர்ந்த சில நிறுவனங்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாக அதிகாரிகளின் மீது 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளில் முறைகேடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில், இவை அனைத்தும் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் என்றும், இவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறி பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சோழமண்டலம் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவித்துள்ளதாவது:
நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகும். இது எதிர்கால கண்ணோட்டத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் சிறு போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள். இவர்கள் அனைவரும் சம்பாதிப்பது, செலவழிப்பதெல்லாம் ரொக்கமாகத்தான்.
இ.எம்.ஐ., தொகையையும் ரொக்கமாகவே செலுத்துகின்றனர்.
இவ்வாறு வசூலிக்கப்படும் தொகை வங்கிகளில் டிபாசிட்களாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே நிறுவனத்தின் டிபாசிட் 25,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.
இதில் எந்த தவறும் நடக்கவில்லை. கடந்த நவம்பர் மாத நிலவரப்படி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 26,783 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் அதிகம்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.
நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகும். இது எதிர்கால கண்ணோட்டத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.