10,900 மின்சார பேருந்துகளுக்கு சி.இ.எஸ்.எல்., நிறுவனம் டெண்டர்; 40 லட்சம் டன் கார்பன் உமிழ்வு குறையும்
10,900 மின்சார பேருந்துகளுக்கு சி.இ.எஸ்.எல்., நிறுவனம் டெண்டர்; 40 லட்சம் டன் கார்பன் உமிழ்வு குறையும்
UPDATED : அக் 27, 2025 10:05 AM
ADDED : அக் 27, 2025 01:18 AM

புதுடில்லி: தேசிய மின்சாரப் பேருந்து திட்டத்தின் கீழ், நாட்டின் முக்கிய நகரங்களுக்காக 10,900 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டரை, வரும் நவ. 6, அன்று, பொதுத்துறையைச் சேர்ந்த சி.இ.எஸ்.எல்., நிறுவனம் திறக்கவுள்ளது.
ஹைதராபாத், சூரத், ஆமதாபாத், டில்லி மற்றும் பெங்களூரு உட்பட பல நகரங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பேருந்துகளை வழங்குவதற்காக இந்த டெண்டர் விடப்படுகிறது.
பெங்களூருக்கு அதிகபட்சமாக 4,500 பேருந்துகள், டில்லிக்கு 2,800 பேருந்துகள், ஹைதராபாதுக்கு 2,000 பேருந்துகளும் ஒதுக்கப்பட உள்ளன. சூரத் மற்றும் ஆமதாபாதுக்கு மொத்தம் 1,600 பேருந்துகள் கிடைக்கும்.
ஏசி, ஏசி அல்லாதவை, தாழ்தளம் உள்ளவை போன்ற பல்வேறு வகைகளில் பேருந்துகள் வாங்கப்படவுள்ளன. டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுவதால், ஆண்டுக்கு 40 லட்சம் டன்னுக்கும் அதிகமான அளவிற்கு கார்பன் உமிழ்வு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலின சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, இந்த பேருந்துகளில் பெண்கள் ஓட்டுநர்களாகவும், பராமரிப்பு பொறியாளர்களாகவும் நியமிக்கப்படுவர் என உறுதி அளிக்கப் பட்டுள்ளது.


