/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
சிறு, குறு நிறுவன கடன் வரம்பு இரட்டிப்பாக ரிசர்வ் வங்கி முடிவு
/
சிறு, குறு நிறுவன கடன் வரம்பு இரட்டிப்பாக ரிசர்வ் வங்கி முடிவு
சிறு, குறு நிறுவன கடன் வரம்பு இரட்டிப்பாக ரிசர்வ் வங்கி முடிவு
சிறு, குறு நிறுவன கடன் வரம்பு இரட்டிப்பாக ரிசர்வ் வங்கி முடிவு
ADDED : ஆக 13, 2025 02:11 AM

புதுடில்லி: சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், வழங்கப்படும் பிணையற்ற கடன் வரம்பை, 20 லட்சம் ரூபாயாக, இரட்டிப்பாக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.எஸ்.இ., எனப்படும் சிறு, குறு நிறுவனங்களுக்கு தற்போது கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிணையற்ற கடன் வரம்பு 10 லட்சம் ரூபாயாக உள்ளது.
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், இதை இரட்டிப்பாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் இதுகுறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறிய தாவது:
சமீபத்தில் நிதி சேவைகள் துறை அதிகாரிகள் ஆர்.பி.ஐ., உடன் நடத்திய சந்திப்பின்போது, கடன் வரம்பை உயர்த்த ரிசர்வ் வங்கியும் ஒப்புக்கொண்டு உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து வங்கிகளுடனும் பேச்சு நடந்து வருகிறது. உச்ச வரம்பை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் எதுவும் தேவையில்லை.
திட்டத்தை மாற்றுவதற்கான அறிவிப்பு ஒன்றே போதும். திட்டத்தின் வரம்புகளை உயர்த்துவதைத் தவிர, மீதமுள்ள திட்டம் அப்படியே தொடரும். இது சிறு, குறு நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிணையற்ற கடன் வரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சம் என இரட்டிப்பாக்க திட்டம்