/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
கடல்சார் மேம்பாட்டுக்கான நிதியை ரூ.70,000 கோடியாக உயர்த்த முடிவு
/
கடல்சார் மேம்பாட்டுக்கான நிதியை ரூ.70,000 கோடியாக உயர்த்த முடிவு
கடல்சார் மேம்பாட்டுக்கான நிதியை ரூ.70,000 கோடியாக உயர்த்த முடிவு
கடல்சார் மேம்பாட்டுக்கான நிதியை ரூ.70,000 கோடியாக உயர்த்த முடிவு
UPDATED : ஆக 16, 2025 10:13 AM
ADDED : ஆக 16, 2025 01:11 AM

புதுடில்லி: கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு, கடல்சார் மேம்பாட்டு நிதியை 70,000 கோடி ரூபாயாக உயர்த்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பல் கட்டுமானம், கப்பல் பழுதுபார்ப்பு, துணைத் தொழில்கள், கப்பல் போக்குவரத்து விரிவாக்கம் மற்றும் துறைமுகத்துடன் இணைக்கப்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை அறிவித்தது.
முன்மொழியப்பட்டதைவிட தற்போது 2.80 மடங்கு அதிகமாக, எம்.டி.எப்., எனும் கடல்சார் மேம்பாட்டு நிதியை 70,000 கோடி ரூபாயாக, உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருத்தப்பட்ட இந்நிதி ஒதுக்கீட்டிற்கு, ஏற்கனவே நிதியமைச்சகத்தின் செலவின செயலர் தலைமையிலான செலவின நிதிக்குழுவிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், இதற்கான அமைச்சரவை ஒப்புதலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.