/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ஐ.சி.ஐ.சி.ஐ., மினிமம் பேலன்ஸ்; அரசு தலையிட வலியுறுத்தல்
/
ஐ.சி.ஐ.சி.ஐ., மினிமம் பேலன்ஸ்; அரசு தலையிட வலியுறுத்தல்
ஐ.சி.ஐ.சி.ஐ., மினிமம் பேலன்ஸ்; அரசு தலையிட வலியுறுத்தல்
ஐ.சி.ஐ.சி.ஐ., மினிமம் பேலன்ஸ்; அரசு தலையிட வலியுறுத்தல்
ADDED : ஆக 12, 2025 07:10 AM

கொல்கட்டா: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி புதிய சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை உயர்த்திய விவகாரத்தில் தலையிடக் கோரி, மத்திய நிதி அமைச்சகத்துக்கு சமூக அமைப்பு ஒன்று கடிதம் எழுதியுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இந்த மாதம் முதல், புதிதாக கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்கள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை, ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளது.
நகர்ப்புறங்களுக்கு 10,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும்; சிறிய நகரங்களுக்கு 5,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும்; கிராமப்புறங்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது.
இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ள ஒரு அமைப்பு, வங்கியின் இந்த நடவடிக்கை, அனைவருக்கும் வங்கி சேவை வழங்குவது என்ற அரசின் முயற்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என தெரிவித்துள்ளது.
வங்கிகளின் சுதந்திரம் இதற்கிடையே, தங்களது விருப்பத்துக்கேற்ப குறைந்தபட்ச சராசரி இருப்பை நிர்ணயித்துக் கொள்ள வங்கிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.