/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ஏற்றுமதியாளர்களுக்கு கடன் தர அதிக கேள்விகள் கேட்கும் வங்கிகள்
/
ஏற்றுமதியாளர்களுக்கு கடன் தர அதிக கேள்விகள் கேட்கும் வங்கிகள்
ஏற்றுமதியாளர்களுக்கு கடன் தர அதிக கேள்விகள் கேட்கும் வங்கிகள்
ஏற்றுமதியாளர்களுக்கு கடன் தர அதிக கேள்விகள் கேட்கும் வங்கிகள்
ADDED : ஆக 12, 2025 07:11 AM

புதுடில்லி: இந்திய பொருட்களுக்கான அமெரிக்க வரி விதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, ஏற்றுமதியாளர்களிடம் இருந்து வரும் புதிய கடன் விண்ணப்பங்கள் மற்றும் கடன் புதுப்பிப்புகளை இந்திய வங்கிகள் அதிகளவில் ஆய்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக, ப்ளூம்பெர்க் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:
அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யும் துறைகளான ஜவுளி, நவரத்தினம் மற்றும் ஆபரணத் துறைகள் இத்தகைய ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. கடனில் சிக்கி தவிக்கும் நிறுவனங்கள், கடந்த காலங்களைப் போன்று வங்கிகளில் நிதி நெருக்கடிக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் வங்கிகளிடம் உள்ளது.
நிறுவனங்களின் வருவாயில் அமெரிக்காவின் பங்கு எவ்வளவு என்பதை ஆராய்ந்து, அதிகம் பாதிப்படையக்கூடிய வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு வருகின்றன. மேலும், புதிய நிதி திட்டங்களை சரிபார்க்கும் போது அல்லது புதுப்பிக்கும்போது வங்கிகள் கடன் வாங்குபவர்களிடம் அதிகப்படியான கேள்விகளை கேட்பதாக தொழில்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.
இது இந்திய ஏற்றுமதியை மேலும் பாதிப்படையச் செய்யும் என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தெரிவித்துஉள்ளது.