நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்களில் பிளாஸ்டிக் தடை
பெங்களூரு:மேல்சபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் மாதேகவுடா கேள்விக்கு பதிலளித்து, ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், ''கோவில்களை சுத்தமாக பராமரிக்கும் வகையில், ஆக., 15ம் தேதி முதல் ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும், பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
விதியை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கோவில் எல்லைக்குள் பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.