/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண் அதிகாரி கழுத்தில் கத்தி வைத்து திருட்டு
/
பெண் அதிகாரி கழுத்தில் கத்தி வைத்து திருட்டு
ADDED : ஆக 14, 2025 04:04 AM
எலஹங்கா: பெங்களூரு எலஹங்காவில் உள்ள, 'பெஸ்காம் சி 7' அலுவலக உதவி பொறியாளர் சுஷ்மிதா. எலஹங்காவில் உள்ள பி.ஜி.,யில் தங்கி உள்ளார். கடந்த 11ம் தேதி மதியம் தனது அறைக்குள் இருந்தார். கதவு தட்டும் சத்தம் கேட்டதால், கதவை திறந்தார்.
வாசலில் நின்ற இரண்டு மர்ம நபர்கள், சுஷ்மிதாவின் கழுத்தில் கத்தியை வைத்தனர். அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுக்கும்படி மிரட்டினர். அந்த நபர்களை பிடித்து தள்ளிவிட்டு கழிப்பறைக்கு சென்று, கதவை பூட்டி கொண்டார். படுக்கை மீது இருந்த இரண்டு மொபைல் போன்களை கொள்ளையடித்துவிட்டு, இருவரும் தப்பி சென்றனர்.
சிறிது நேரம் கழித்து கழிப்பறையில் இருந்து வெளியே வந்த சுஷ்மிதா, எலஹங்கா போலீசில் புகார் செய்தார். பி.ஜி., மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருக்கும், கண்காணிப்பு கேமராக்க ளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.