ADDED : ஏப் 16, 2026 03:56 AM

பெங்களூரு: மெட்ரோ ரயில் நிலையத்தில் இறந்த குட்டியுடன் பரிதாபமாக சுற்றித்திரியும் தாய் குரங்கு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்க ளூரு மாதவாரா மெட்ரோ ரயில் நிலையத்தில், தன் இறந்த குட்டியை தாய் குரங்கு சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இறந்து ஓரிரு நாட்களுக்கும் மேலான குரங்கு குட்டியை, தாய் குரங்கு சுமந்து செல்கிறது.
இந்த குரங்கு கடந்த இரண்டு நாட்களாக மாதவாரா மெட்ரோ ரயில் நிலையத்தையே சுற்றி வந்தது. இதை பார்க்கும் பயணியர் மனம் உடைந்து உள்ளனர். தனது குட்டி மீண்டும் உயிர்த்தெழுமா என்ற ஆசையில் தாய் குரங்கு செய்யும் செயல்கள் பார்ப்போருக்கு கண்ணீரை வரவழைக்கிறது.
இந்த குரங்கு செய்யும் காட்சிகளை பயணியர் பலரும் தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். 'தாயின் அன்புக்கு முன்னால் இவ்வுலகில் எதுவும் ஈடில்லை' என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
