/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு - கயா, காசி, பிரயாக்ராஜ் அயோத்திக்கு ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலா
/
பெங்களூரு - கயா, காசி, பிரயாக்ராஜ் அயோத்திக்கு ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலா
பெங்களூரு - கயா, காசி, பிரயாக்ராஜ் அயோத்திக்கு ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலா
பெங்களூரு - கயா, காசி, பிரயாக்ராஜ் அயோத்திக்கு ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலா
ADDED : டிச 14, 2025 08:02 AM
பெங்களூரு: ஆங்கில புத்தாண்டை ஒட்டி, பெங்களூரில் இருந்து கயா, காசி, பிரயாக்ராஜ், அயோத்திக்கு ரயிலில் சுற்றுலா செய்யும் வாய்ப்பை ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்து உள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., எனும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
----------------டிச., 30 ம் தேதி, பெங்களூரில் விமானத்தில் காலை 8:25 மணிக்கு புறப்பட்டு, 10:55 மணிக்கு பாட்னாவை சென்றடையும்.
அங்கு இறங்கியதும், புத்தகயா சென்று மகாபோதி கோவிலில் தரிசனம் செய்யலாம். அன்றிரவு அங்கேயே தங்குவது; இரண்டாம் நாள் காலை, கயாவில் உள்ள விஷ்ணு கோவிலில் தரிசனம்.
பின், வாரணாசி பயணம். இரவில் அங்கு தங்கல்; மூன்றாம் நாள் அதிகாலை காசி விஸ்வநாதர் கோவில், விசாலாட்சி கோவில், அன்னபூர்ணா கோவிலில் தரிசனம். மாலையில் கங்கா ஆரத்தி தரிசனம்.
அன்றிரவு அங்கேயே தங்கல்; நான்காம் நாள் காலையில் உணவுக்கு பின், பிரயாக்ராஜ் பயணம். அங்கு திரிவேணி சங்கமம், பாதாளபுரி கோவில் தரிசனம் முடிந்த பின், அயோத்தி பயணம்.
இரவில் அங்கேயே தங்குவது; ஐந்தாம் நாளான ஜனவரி 3 ம் தேதி காலையில் அயோத்தி ராமர், ஹனுமன் கோவிலில் தரிசனத்துக்கு பின், மதியம் அயோத்தி விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்படுவர்.
அங்கிருந்து பகல் 2:30 மணிக்கு புறப்பட்டு மாலை 5:00 மணிக்கு பெங்களூரு வந்தடைவர்.
பயணம் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு பயணியர் வந்துவிட வேண்டும்.
பயண நாட்களில் உணவு வசதி, தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்படும்.
சுற்றுலாவில், அனைத்து இடங்களுக்கும் நுழைவு கட்டணம், ஸ்டில் / வீடியோ கேமரா கட்டணம், படகு சவாரி கட்டணத்தை பயணியர் ஏற்க வேண்டும்.
விமான கட்டண உயர்வு, விமான நிலைய வரிகளில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட எந்தவொரு தனிப்பட்ட செலவுகளையும் ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்காது.
நிலச்சரிவுகள், வேலை நிறுத்தங்கள், ஊரடங்கு உத்தரவுகள், விபத்துகள், காயம், தாமதம் அல்லது விமானங்கள் ரத்து போன்ற எந்தவொரு அவசர நிலைக்கும் ஐ.ஆர்.சி.டி.சி., பொறுப்பேற்காது.
ஒரு பயணிக்கு 42,600 ரூபாய்; இரண்டு பேர் சேர்ந்து புக்கிங் செய்யும் போது ஒருவருக்கு தலா 33,950 ரூபாய்; மூன்று பேர் சேர்ந்து புக்கிங் செய்யும் போது, ஒருவருக்கு தலா 31,900 ரூபாய். 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு படுக்கை வசதியுடன் 31,750 ரூபாய்; படுக்கை வசதி இல்லாமல் 29,600 ரூபாய்; 2 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கான படுக்கை வசதி இல்லாமல் 18,450 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பயண டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பினால், www.irctctourism.com என்ற இணையதளத்தில் மட்டுமே ரத்து செய்ய முடியும். பயணத்தின் 21 நாட்களுக்கு முன் ரத்து செய்தால் 30 சதவீதம் தள்ளுபடியும்; 21 முதல் 15 நாட்களுக்கு முன் ரத்து செய்தால் 55 சதவீதம்; 14 முதல் 8 நாட்களுக்குள் ரத்து செய்தால் 80 சதவீதம் டிக்கெட் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
இதுபோன்று பிப்., 5ம் தேதி புறப்பட்டு 9ம் தேதி பெங்களூரு வருவதற்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் பொறுத்து விமான கால அட்டவணை மாறும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

