/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆபாச வீடியோக்கள் பார்த்த இளைஞர் மீது 32 வழக்கு பதிவு
/
ஆபாச வீடியோக்கள் பார்த்த இளைஞர் மீது 32 வழக்கு பதிவு
ஆபாச வீடியோக்கள் பார்த்த இளைஞர் மீது 32 வழக்கு பதிவு
ஆபாச வீடியோக்கள் பார்த்த இளைஞர் மீது 32 வழக்கு பதிவு
ADDED : டிச 14, 2025 08:01 AM
ராய்ச்சூர்: இரவு, பகல் பாராமல் நாள் முழுதும் ஆபாச படம் பார்த்த, பிரபலமான குடும்பத்தை சேர்ந்த இளைஞர் மீது 32 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ராய்ச்சூர் நகரின் சைபர் கிரைம் டெபுடி எஸ்.பி., வெங்கடே ஷ் ஹோகிபன்டி கூறியதாவது:
இணையதளங்களில் ஆபாச படங்கள், வீடியோக்களை அப்லோடு செய்வது, எவ்வளவு குற்றமோ, அவற்றை பார்ப்பதும் அதே அளவுக்கு, பெரிய குற்றமாகும்.
இத்தகையோரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுப்பதில் ராய்ச்சூரின் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோக்கள், போட்டோக்கள் பார்ப்பதும், மற்றவருக்கு ஷேர் செய்வதும், சைபர் குற்ற சட்டத்தின்படி குற்றமாகும்.
இதை தடுக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், போலீஸ் துறை மும்முரமாக பணியாற்றுகிறது. ஆபாச படங்கள், வீடியோக்களை பார்ப்போர், அப்லோட் செய்வோரை அடையாளம் காண்கின்றனர்.
இது பற்றி அதிகாரிகள், ஆய்வு செய்த போது ராய்ச்சூரின் பிரபலமான குடும்பத்தை சேர்ந்த இளைஞர் சிக்கினார். இணைய தளத்தில் லிங்க் ஆகியுள்ள, இ - மெயில் மற்றும் மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்த போது, இளை ஞரின் செயல் தெரிந்தது.
அளவுக்கு அதிகமான ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளார். பார்த்த பின் அவற்றை அழித்துள்ளார். ஆனால் இவர், இணையதளத்தில் பார்த்த வீடியோக்கள், டேட்டாவில் பதிவாகியுள்ளன.
இதன் அடிப்படையில், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் ஆபாச வீடியோக்களை பார்த்ததை உறுதி செய்து கொண்ட பின், அவர் மீது போலீசார், பல்வேறு சட்டப்பிரிவின் கீழ், 32 வழக்குகள் பதிவு செய்துள்ள விசாரிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

