/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு தசராவில் விமான சாகசம் மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி
/
மைசூரு தசராவில் விமான சாகசம் மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி
மைசூரு தசராவில் விமான சாகசம் மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி
மைசூரு தசராவில் விமான சாகசம் மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி
ADDED : ஆக 21, 2025 10:58 PM
பெங்களூரு: தசராவின்போது விமான சாகச கண்காட்சி நடத்த அனுமதி அளித்த மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, முதல்வர் சித்தராமையா நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.
மைசூரு தசரா விழா செப்., 22ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கின்றன. முதல் கட்டமாக ஒன்பது யானைகள் வந்துள்ளன. இரண்டாம் கட்டமாக ஐந்து யானைகள் அடுத்த வாரம் வர உள்ளன.
கடந்த மாதம் புதுடில்லி சென்றிருந்தபோது முதல்வர் சித்தராமையா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, தசராவுக்கு மேலும் மெறுகேற்றும் வகையில், விமான சாகச கண்காட்சி நடத்த அனுமதிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று, அவரும் அனுமதி அளித்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து ராஜ்நாத்சிங்கிற்கு, முதல்வர் சித்தராமையா அனுப்பியுள்ள கடிதம்:
நடப்பாண்டு மைசூரு தசரா விழாவுக்கு, இந்திய விமானப்படையின் விமான சாகச கண்காட்சியை நடத்த அனுமதி அளித்ததற்கு, கர்நாடக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்செயல் நம் வரலாற்று விழாக்களுக்கு பெருமை சேர்ப்பதுடன், நாடு முழுதும் இருந்து வரும் லட்சக்கணக்கான மக்கள் இடையே பெருமையும், தேச பக்தியையும் வளர்க்கும்.
உண்மையிலேயே இந்நிகழ்ச்சியில் நீங்கள் நேரில் கலந்து கொள்ள முடிந்தால், அது எங்களுக்கு பெரிய மரியாதையாகும். உங்களின் வருகை, கர்நாடக மக்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கும்.
நம் ஆயுதப்படைகள் மீது நாம் வைத்திருக்கும் மரியாதை, போற்றுதலின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும். வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசராவில் உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.