/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'நொண்டி' என்று கிண்டல் செய்த தம்பியை கொன்ற அண்ணன் கைது
/
'நொண்டி' என்று கிண்டல் செய்த தம்பியை கொன்ற அண்ணன் கைது
'நொண்டி' என்று கிண்டல் செய்த தம்பியை கொன்ற அண்ணன் கைது
'நொண்டி' என்று கிண்டல் செய்த தம்பியை கொன்ற அண்ணன் கைது
ADDED : ஆக 21, 2025 10:58 PM

ஷிவமொக்கா: தன்னை நொண்டி என்று கிண்டல் செய்த சித்தப்பா மகனை கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
ஷிவமொக்கா மாவட்டம், பென்னிகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனுமந்தா. இவரது சித்தப்பா மகன் ஜனார்த்தன்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஒரே பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினர். இதில் ஹனுமந்தாவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அன்று முதல் முடமான ஒரு காலுடன் ஹனுமந்தா நடந்து வந்தார். இதை பார்க்கும் சிலர், அவரை நொண்டி என்று கேலி செய்து வந்தனர்.
மற்றவர்கள் செய்தால் பரவாயில்லை; ஜனார்த்தனனும் தன்னை கிண்டல் செய்வதை ஹனுமந்தாவால் ஏற்க முடியவில்லை.
அத்துடன், விபத்தின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனக்கு, பண உதவி செய்யவில்லை என்றும் அவர் கோபத்தில் இருந்தார்.
இந்நிலையில், வினோபா நகர் பிரியங்கா லே - அவுட்டில் உள்ள நிசர்கா ஹோட்டலில் சமையல்காரராக பணியாற்றி வந்த ஜனார்த்தனுக்கு நேற்று முன்தினம் இரவு போன் செய்த ஹனுமந்தா, 'முக்கியமான விஷயம் பேச வேண்டும் வா' என்று அழைத்துள்ளார்.
ஜனார்த்தனும் ஹோட்டலுக்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஹனுமந்தா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜனார்த்தனை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார்.
மார்பு, வயிறு பகுதிகளில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜனார்த்தனன் உயிரிழந்தார். தப்பிச் செல்வதற்காக ரயில் நிலையத்தில் இருந்த ஹனுமந்தாவை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.