/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு - விஜயநகரா நேரடி விமான சேவை துவக்கம்
/
பெங்களூரு - விஜயநகரா நேரடி விமான சேவை துவக்கம்
ADDED : நவ 04, 2025 04:52 AM
பெங்களூரு: பெங்களூரில் இருந்து விஜயநகராவுக்கு நேரடி விமான சேவையை 'ஸ்டார் ஏர்' நிறுவனம் தொடங்கி உள்ளது.
பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து, விஜயநகரா மாவட்டத்தில் உள்ள ஜிந்தால் வித்யாநகர் விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவையை துவங்கி உள்ளதாக ஸ்டார் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. பெங்களூரில் இருந்து காலை 9:50 மணிக்கு புறப்படும் விமானம், ஜிந்தால் விமான நிலையத்தை காலை 10:40 மணிக்கு சென்றடையும். அது போல, மறுமார்க்கத்தில் ஜிந்தாலில் இருந்து காலை 11:10 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12:00 மணிக்கு வந்தடையும். பயண நேரம் 50 நிமிடங்கள்.
டிக்கெட் விலை 1,850 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹம்பிக்கு செல்ல விரும்புவோரின் பயண நேரம் கணிசமாக குறையும். இந்த விமான சேவை, இம்மாதம் 1ம் தேதியில் இருந்து துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

