/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்த 10ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை
/
அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்த 10ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை
அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்த 10ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை
அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்த 10ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை
ADDED : நவ 27, 2025 07:19 AM
கொப்பால்: விடுதியில் தங்கியிருந்த 10ம் வகுப்பு மாணவி, குழந்தை பெற்றெடுத்தது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. யாரை நம்பி சிறுமியரை பள்ளிக்கு அனுப்புவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொப்பால் மாவட்டம், குகனுாரு தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் 15 வயது சிறுமி, குகனுாரில் உள்ள அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படிக்கிறார். பள்ளி விடுதியில் தங்கியுள்ளார்.
இவருக்கு நேற்று முன்தினம், திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அவரை ஆசிரியர்கள், கொப்பாலின் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கருவுற்றிருப்பதை கண்டுபிடித்தனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த சம்பவம், மாவட்டத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து, மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் விடுதி வார்டன் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மாணவி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தும், ஆசிரியர்களோ அல்லது விடுதி வார்டனோ கவனிக்காதது எப்படி, மாணவி கர்ப்பிணி என, தெரிந்தும் மவுனமாக இருந்தனரா, யாரை நம்பி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது என, பெற்றோரும், கிராமத்தினரும் கேள்வி எழுப்புகின்றனர்.
தகவலறிந்த கொப்பால் கலெக்டர் சுரேஷ் ஹிட்னால், எஸ்.பி., ராம் அரசித்தி, நேற்று மருத்துவமனைக்கு சென்று, சிறுமியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து, நடவடிக்கை எடுத்த குகனுார் போலீசார், சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான இளைஞரை கைது செய்தனர். அவர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.

