/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிரிக்கெட் பந்து விவகாரம் 3 பேர் படுகாயம்; 6 பேர் கைது
/
கிரிக்கெட் பந்து விவகாரம் 3 பேர் படுகாயம்; 6 பேர் கைது
கிரிக்கெட் பந்து விவகாரம் 3 பேர் படுகாயம்; 6 பேர் கைது
கிரிக்கெட் பந்து விவகாரம் 3 பேர் படுகாயம்; 6 பேர் கைது
ADDED : ஜன 20, 2026 06:31 AM
மைசூரு: தங்கள் வீட்டில் கிரிக்கெட் பந்தை எடுத்த சிறுவனை திட்டி அடித்த சம்பவத்தில் பெரியவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன், ஆறு பேர் தலைமறைவாகி உள்ளனர்.
மைசூரு உதயகிரியின் ராஜிவ் நகர் இரண்டாவது ஸ்டேஜில் நேற்று முன்தினம் சில சிறுவர்கள், கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது 11 வயது சிறுவன் அடித்த பந்து, ஒரு வீட்டின் வளாகத்திற்குள் விழுந்தது. இதை பார்த்த வீட்டு உரிமையாளர், சிறுவனை அழைத்து, 'இங்கு விளையாட வேண்டாம். உங்கள் வீட்டின் முன் விளையாடு' என்று அதட்டி, தலையில் அடித்து அனுப்பினார்.
இது பற்றி, சிறுவன், தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். கோபமடைந்த பெரியவர்கள், சிறுவனை தாக்கியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு குடும்பத்தினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. சிறுவனின் உறவினர் ஒருவர் கையில் கத்தியுடனும், சிலர் கிரிக்கெட் ஸ்டெம்புடன் வந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், ஆபாச வார்த்தைகளால் திட்டி கொண்டும் சண்டை போட்டனர்.
படுகாயம் அடைந்த இருவர், மணிப்பால் மருத்துவமனையிலும், மற்றொருவர் பிரஜ்வல் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த உதயகிரி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ஆறு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆறு பேரை தேடி வருகின்றனர்.
இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

