sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கல்லுாரி பஸ் மோதி தாய், மகன் பலி

/

 கல்லுாரி பஸ் மோதி தாய், மகன் பலி

 கல்லுாரி பஸ் மோதி தாய், மகன் பலி

 கல்லுாரி பஸ் மோதி தாய், மகன் பலி


ADDED : ஜன 20, 2026 06:31 AM

Google News

ADDED : ஜன 20, 2026 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அசோக்நகர்: வேகமாக சென்ற தனியார் கல்லுாரி பஸ் மோதியதில், தாயும், மகனும் பலியாகினர்.

ஆந்திராவை சேர்ந்தவர் பிரசாத், 40. இவரது மனைவி சங்கீதா, 37. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர், சொந்த ஊரில் விவசாயம் செய்கிறார். மனைவி சங்கீதா, பெங்களூரின் ஆடுகோடி அருகில் உள்ள ஆர்மி பள்ளியில், உதவியாளராக பணியாற்றினார். ஈஜிபுராவில் ம கன்களுடன் வசித்து வந்தார்.

நேற்று காலை 6:30 மணியளவில், தன் மகன் பார்த்தா, 8,வை பள்ளியில் விடுவதற்காக அவரது தாயார் சங்கீதா அழைத்து சென்றார். விவேக்நகர் ஜங்ஷன் அருகில், சாலையை கடந்து செல்லும் போது, வேகமாக வந்த தனியார் கல்லுாரி பஸ், அவர்கள் மீது மோதியது. பலத்த காயமடைந்த தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய பஸ் ஓட்டுநர், பஸ்சை நிறுத்தாமல் சென்றார். சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த அசோக்நகர் போலீசார், இரண்டு உடல்களையும் மீட்டனர். கல்லுாரி பஸ் ஓட்டுநரின் பெயர் சுனில் என்பது விசாரணையில் தெரிந்தது. அவரை, போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us