PUBLISHED ON : ஆக 09, 2026

அ நிறம் | அளவு
அடிமை விலங்கினைஅகிம்சையில் அகற்றி அடைந்தோம் ஆனந்த சுதந்திரம்...அந்நியர் ஓடிட புண்ணிய தேசத்தின் புகழை நாட்டுவோம் தினம் தினம்!
செக்கை இழுத்ததில் சிறையில் கிடந்ததில் பக்கம் வந்தது சுதந்திரம்...குருதி வடிந்தும் உறுதி முளைத்த நெஞ்சை நினைத்திடு தினம் தினம்!
எம்மண் எம்மொழி எம்மினம் என்பதே யாவரும் ஏற்றிடும் சுதந்திரம்... அம்மண் அம்மொழி அவ்வினம் அடைந்திட தம்முயிர் தந்தாரை துதி தினம்!
சிறந்த நம் கொடியும் சிலிர்ப்புடன் பறந்திட சிந்தை மகிழ்வதே சுதந்திரம்... பறித்தநம் உரிமையும் கிடைத்தது மீண்டும் மீட்டவர் வாழ்கவே தினம் தினம்!
இரவினில் வந்தது விடியலை தந்தது விழிகளில் நின்றநல் சுதந்திரம்... உறவுகள் ஆயிரம் கரைந்ததை எண்ணிடு உயரட்டும் என்றுமே பாரதம்!
- எஸ்.முருகன், கடம்பத்துார்,திருவள்ளூர் மாவட்டம்.தொடர்புக்கு: 98949 18250
