/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை: தாழ்ந்து பணிந்து வணங்குவோம்!
/
கவிதைச்சோலை: தாழ்ந்து பணிந்து வணங்குவோம்!
PUBLISHED ON : ஆக 31, 2025

* ஆசிரியப் பணியே அறப்பணி
முக்காலத்திலும் முதன்மை பணி
தலைவர்களை உருவாக்கும் தலைமை பணி
மாதா பிதா குரு தெய்வம் என
கடவுளுக்கு முன்னராய் வைத்து ஆசிரியரை தாழ்ந்து பணிந்து வணங்குவோம்!
* நல்லறிவு நன்னடத்தை நல்லொழுக்கம் கற்பித்து
அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானத்தை புகுத்தி
அன்பை சொரிந்து அறிவை பகிர்ந்து
கனிவை தந்து கண்டிப்பையும் காட்டும் ஆசிரியரை
தாழ்ந்து பணிந்து வணங்குவோம்!
* வான்மகள் பொழியும் மழை
பாலைவனத்தை சோலைவனமாக்கும்
ஆசிரியர் தரும் அறிவுரை
பேதை மாணவனை மாமேதை ஆக்கும்
படிப்படியாய் மாணவன் முன்னேற
படிக்கட்டுகளாய் தாங்கி நிற்கும் ஆசிரியரை தாழ்ந்து பணிந்து வணங்குவோம்!
* சிற்பியிடம் தரும் பாறாங்கல் சிற்பமாகலாம்
ஓவியனிடம் தரும் வெற்றுக்காகிதம் ஓவியம் ஆகலாம்
தச்சனிடம் தரும் மரம் அழகிய மேஜை ஆகலாம்
உழவனிடம் தரும் விதை பயிராகலாம்
ஆனால் தம் மாணவனை
பலருக்கும் தொழில் தரும் தொழிலதிபர்கள்
அறிஞர்கள் சான்றோர்கள் ஆன்றோர்களாக மாற்றும்
வல்லமை படைத்த ஆசிரியரை
தாழ்ந்து பணிந்து வணங்குவோம்!
* சிறந்ததை கற்பிக்க
சிறப்பான மாணவனை உருவாக்க
தினம் தினம் கேட்கும் ஐயங்களுக்கு விடை காண தினமும் தம்மை புதுப்பித்துக் கொள்பவர்கள் தம் மாணவனின் வெற்றியை
தம் வெற்றியாக கொண்டாடும் ஆசிரியரை தாழ்ந்து பணிந்துவணங்குவோம்!
* கதிரவனின் வெம்மை சுடும் ஆனாலும் அது உயிர்களை வாழ வைக்கிறது ஆசிரியரின் கண்டிப்பு காயப்படுத்தும்ஆனாலும் நம்மை நல்வழிப்படுத்தும் கண்டிக்கும் தந்தையாகவும்கனிவு காட்டும் தாயாகவும் தண்டிக்கும் காவலராகவும் இருக்கும்ஆசிரியரை தாழ்ந்து பணிந்துவணங்குவோம்!
* நல்லாசிரியரின் சொல்வழி நடந்தவர்களே நேற்றைய வெற்றியாளர்கள்
தம் ஆசிரியரின் வழிகாட்டுதலை ஏற்பவர்களேஇன்றைய வெற்றியாளர்கள்சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் சர்வ வல்லமை படைத்த ஆசிரியரை
தாழ்ந்து பணிந்து வணங்குவோம்- நாம்
தாழ்ந்து பணிந்து வணங்குவோம்!
— யூ.கே.ரேஷ்மி, கோவை.