PUBLISHED ON : ஜன 01, 2025

'உலகம்' வசமானது
ஜூன் 29: பார்படாசில் நடந்த 'டி-20' உலக கோப்பை பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி கோப்பை வென்றது.
'குட்-பை'
டிச. 18: டெஸ்ட் அரங்கில் 537 விக்கெட் வீழ்த்திய 'ஸ்பின் கிங்' அஷ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.
'யூரோ'... 'ஹீரோ'
ஜூலை 14: ஜெர்மனியில் நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
தங்கமான தருணம்
டிச. 1: லக்னோவில் நடந்த சையது மோடி சர்வதேச பாட்மின்டன் ஒற்றையரில் இந்திய வீராங்கனை சிந்து தங்கம் வென்றார்.
ஈட்டியில் கெட்டி
ஆக. 8: பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார்.
சபாஷ் இந்தியா
ஆக. 8: பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி மீண்டும் வெண்கலம் கைப்பற்றியது.
வெண்கல நாயகன்
செப். 4: பாரிசில் நடந்த 'பாராலிம்பிக்' உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் வெண்கலம் கைப்பற்றினார்.
முதல் கோப்பை
செப். 7: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா முதன்முறையாக கோப்பை வென்றார்.