PUBLISHED ON : டிச 29, 2010

***************************
தமிழகம்
*****************************
ஜன., 3: பஸ் டிரைவர்கள் பணியின் போது மொபைல் போன் பயன்படுத்த தமிழக அரசு தடை.
ஜன., 5: நீலகிரியில் தொடர்மழையால் சேதமடைந்த குன்னூர் - ஊட்டி ரயில் பாதை மீண்டும் துவக்கம்.
ஜன., 6: செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத்தொடர் கவர்னர்உரையுடன் துவங்கியது.
*அரசு புறம்போக்கு இடங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் குடியிருந்தாலே இலவசப்பட்டா, நெல் கொள்முதல் விலை உயர்வு, குடிசை வீடுகளை ஒழித்து கான்கிரீட் வீடுகள் போன்ற சலுகைகள் அறிவிப்பு.
பரிதாபம்: ஜன., 7ல் குண்டு வீசித் தாக்கப்பட்ட நெல்லை சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது, அவ்வழியே சென்ற அமைச்சர்கள் மைதீன்கான், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் நெல்லை கலெக்டர் ஜெயராமன் ஆகியோரிடம் அவசர உதவி கேட்டார். தயங்கி நின்ற அவர்கள் முன்பு பரிதாபமாக உயிரிழந்தார் வெற்றிவேல்.
ஜன., 18: உயர் அழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள தொழிற்சாலைகளுக்கு, 'பீக் அவர்' நேரத்தில் கூடுதல் கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் திட்டம் அமல்.
* இந்தியாவில் உள்ள தகுதி இல்லாத 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு. இதில் 17 பல்கலைக் கழகங்கள் தமிழகத்தை சேர்ந்தவை.
ஜன,, 19: நடிகர்கள் சூர்யா, வடிவேலு இயக்குனர்கள் ரவிக்குமார், முருகதாஸ் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு.
ஜன., 23: தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் 3-ஜி மொபைல் சேவை துவங்கியது.
ஜன., 26: நாட்டின் உயர்ந்த விருதான பத்ம விருதுகள் அறிவிப்பு, நோபல் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட தமிழகத்தின் 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
ஜன., 30: திருச்சி-விழுப்புரம் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை, மத்திய இணையமைச்சர் அகமது துவக்கினார்.
*****************************************************
இந்தியா
*****************************************************
ஜன., 2: வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக, உத்தரபிர தேசத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 ரயில் விபத்துகளில் 10 பேர் பலி. 50 பேர் படுகாயம்.
ஜன., 3: இந்திய அறிவியல் காங்கிரசின் 97வது மாநாட்டை திருவனந்தபுரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார்.
ஜன., 5: காமன்வெல்த் நாடுகளின், சபாநாயகர்களின் 20வது மாநாட்டை பிரதமர் துவக்கி வைத்தார்.
* உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் ஜனகிரந்தி என்ற புதிய கட்சியை துவக்கினார்.
ஜன., 7: ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2 நாட்களாக நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜன., 8: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, இந்திரா அமைதி விருதை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வழங்கினார்.
ஜன., 12: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் அலுவலகம் குறித்த தகவல் பெறுவது, தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட்பட்டதே என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு.
ஜன., 17: 'உயிர்மூச்சு'மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு, உடல்நலக் குறைவு காரணமாக ஜன.,17ல் காலமானார். மேற்கு வங்க முதல் வராக தொடர்ந்து 23 ஆண்டுகள் இருந்து, இந்தியாவில் நீண்டகாலம் முதல்வர் என்ற பெருமையைப் பெற்றவர். மார்க் சிஸ்ட் (1967) உருவான காலத்தில் இருந்து 2008 வரை கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தார். மறைவுக்குப் பின் அவரது உடல் கோல்கட்டா எஸ்.எஸ்.எம்., மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
ஜன., 16: எட்டு மாநிலங்களுக்கு எம்.கே.நாராயணன், சிவராஜ் பாட்டீல் உள்ளிட்ட புதிய கவர்னர்கள் நியமனம்.
ஜன., 23: அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் பனி மூட்டம் காரணமாக பால் ஏற்றி வந்த லாரி, ஜீப் மீது மோதி 8 பேர் பலி.
ஜன., 24: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட விளம்பரத்தில், பாக்., விமானப்படை தளபதி படம் இடம் பெற்றதால் சர்ச்சை.
ஜன., 25: தேர்தல் கமிஷனின் 60வது ஆண்டுவிழா மாநாட்டில், ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், உட்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு.
ஜன., 30: ஆந்திராவில் கோதாவரி ஆற்றில், பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 11 பேர் பலி.
அமர்சிங் நீக்கம்: சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங், உடல்நிலையை காரணம் காட்டி தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இதற் கிடையில் கட்சி விரோத போக்கில் ஈடுபட்டதாக, கட்சித் தலைவர் முலாயம் அவரை நீக்கினார். தொடர்ந்து அவரது ஆதரவாளரான ஜெயப் பிரதா மற்றும் 4 எம்.எல்.ஏ.,க்களும் நீக்கப்பட்டனர்.
*****************************************************
உலகம்
*****************************************************
ஜன., 1: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் தற்கொலைப்படை தாக்கு தலில் 93 பேர் பலி.
ஜன., 4: தொடரும் இனவெறி: ஆஸி.,யில் கடந்தாண்டு முதல் நடந்து வரும் இனவெறி தாக்குதல்களின் உச்சகட்டமாக, ஜன., 4ல் பஞ்சாப் இளைஞர் நிதின் கார்க், மெல்போர்னில் படுகொலை செய்யப்பட்டார்.
ஜன., 5: விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கவச உடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவிப்பு.
ஜன.,12: உலுக்கிய பூகம்பம்: கரீபிய நாடான ஹெய்தியில் ஜன.,12ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. உலகை சோகத்தில் ஆழ்த்திய இப் பூகம்பம், ரிக்டர் அளவுகளில் 7 ஆக பதிவானது. நாட்டின் அதிபர் மாளிகை உட்பட பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இரண்டு லட்சத்துக்கு அதிகமானோர் பலியானார்கள். மூன்று லட்சம் பேர் காயமடைந்தனர். ஒரு லட்சம் பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். உலக நாடுகள் பலவும் நிவாரண உதவிகளை வழங்கின.
ஜன., 20: 'பிரான்சில் பொது இடங்களில் பர்தா அணிந்து நடமாடினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்ற புதிய சட்டம் அமல்.
ஜன., 25: மோசமான வானிலை காரணமாக விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 90 பேர் பலி.
ஜன., 28: வங்கதேச தந்தை முஜிபூர் ரஹ்மான் கொலை வழக்கில் கைதான ஐந்து முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு 30 ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை நிறைவேற்றம்.
மீண்டும் ராஜபக்ஷே: இலங்கையில் கடந்தாண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரில் ராணுவம் வெற்றி பெற்றது. நாட்டின் 30 ஆண்டுகால உள்நாட்டு போரை முடித்த கர்வத்தோடு ராஜபக்ஷே, முன்னதாக அதிபர் தேர்தலையும் நடத்தினார். ஜன., 26ல் நடந்த அத்தேர்தலில், எதிர்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பொன் சேகாவை தோற்கடித்து மீண்டும் அதிபரானார்.
*****************************************************
விளையாட்டு
*****************************************************
ஜன. 8: சம்பள பாக்கி கேட்டு, இந்திய ஹாக்கி அணி வீரர்கள் போர்க்கொடி.
ஜன. 9: ஆப்ரிக்க கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க சென்ற டோகோ அணியினர் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் பலி.
ஜன. 10: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், குரோஷியாவின் மரின் சிலிக் சாம்பியன்.
ஜன. 13: முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் பைனல் போட்டியில், இந்திய அணி, இலங்கையிடம் தோல்வி.
ஜன. 14: ரஞ்சிக் கோப்பை பைனலில் கர்நாடகாவை வீழ்த்தி, 39 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை.
ஜன. 17: டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 13 ஆயிரம் ரன்களை எட்டி, இந்திய வீரர் சச்சின் சாதனை.
ஜன. 21: மோசமான ஆடுகளம் காரணமாக, டில்லி, பெரோஷா கோட்லா மைதானத்துக்கு ஐ.சி.சி., ஒரு ஆண்டு தடை.
ஜன. 25: இந்திய கிரிக்கெட் அணி வீரர் சேவக், பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு.
ஜன. 27: வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது.
* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ்-செரினா வில்லியம்ஸ் ஜோடி சாம்பியன்.
ஜன. 30: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சாம்பியன்.
* ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன்.
* பெர்த்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 வது ஒரு நாள் போட்டியில், பந்தை கடித்து சேதப்படுத்திய பாகிஸ்தான் வீரர் அப்ரிதிக்கு 2 போட்டி தடை.
ஜன. 31: சூப்பர் ஜோடி: மெல்போர்னில் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண் ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இது கிராண்ட்ஸ்லாம் தொடரில் பயஸ் கைப்பற்றும் 11 வது பட்டமாக அமைந்தது. இதன் மூலம் சக வீரர் மகேஷ் பூபதியின் சாதனையை (11 கிராண்ட்ஸ்லாம் பட்டம்) சமன் செய்தார் பயஸ்.
