தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வருடமலர்/பிப்ரவரி

பிப்ரவரி

பிப்ரவரி


PUBLISHED ON : டிச 29, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 29, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

****************

தமிழகம்

****************



பிப்., 1: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்கு இசையமைத்ததற்காக இரண்டு 'கிராமி' விருதுகள் பெற்றார்.

பிப்., 2: பல கோடி ரூபாய் மதிப்பில் நில மோசடி செய்ததாக நடிகர் சிங்கமுத்து மீது நடிகர் வடிவேலு புகார்.

பிப்., 5: கோவில்பட்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், மு.க., அழகிரியை சந்தித்து மனு.

* போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பாக சென்னை, மதுரை பாஸ்போர்ட் அலுவலகங்களில் சி.பி.ஐ., சோதனை.

பிப்., 12: ஜெயங் கொண்டம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜேந்திரன் முதல்வர் கருணாநிதியுடன் சந்திப்பு.

பிப்., 13: கரும்பு விலையை உயர்த்தக் கோரி அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்.

பிப்., 17: முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐந்து பேர் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

பிப்., 21: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, கச்சத்தீவு புனித அந்தோணியார் விழாவில் இரு நாட்டு மக்களும் பங்கேற்பு.

* வரதராஜன் மரணம்: மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான டபிள்யூ.ஆர். வரதராஜன் திடீரென காணமல் போனார். பின் அவரது உடல் பிப்., 21ம் தேதி போரூர் ஏரியில் கண் டெடுக்கப் பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.

பிப்., 28: சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் 175வது ஆண்டு விழாவில், முதல்வர் கருணாநிதி 75 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.



*****************************************************

இந்தியா

*****************************************************



பிப்., 3: தெலுங்கானா தனி மாநில கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் குழு நியமனம்.

பிப்., 8: ருச்சிகா பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரியானா முன்னாள் டி.ஜி.பி., ரத்தோரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார்.

* ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வியில் வழங்கப்பட்ட 4 சதவீத ஒதுக்கீட்டை ஆந்திர ஐகோர்ட் ரத்து செய்தது.

* காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 17 ராணுவத்தினர் பலி.

பிப்., 9: மரபணு கத்தரிக்காய்க்கு தடை: மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு, எதிர்ப்பு எழுந்தது. பிப்., 9 முதல், பயிரிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்தது.

பிப்.,13: தொடரும் பயங்கரவாதம்: புனேயில் கோரேகான் பூங்கா பகுதியில் உள்ள ஜெர்மன் பேக்கரி மீது பிப்., 13ல், பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். இச் சம்பவத்தில், வெளிநாட்டினர் இருவர் உட்பட 17 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். வெளிநாட்டினர் விரும்பிச் செல்லும் இந்த பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்புக்கு 'லக்ஷர் - இ-தொய்பா அல் அலாமி' என்ற புதிய இயக்கம் பொறுப்பேற்றது.

பிப்., 15: மேற்கு வங்கத்தில்,மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் சில்தா துணை ராணுவ முகாம் மீது மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் பலி.

பிப்., 17: பீகார் மாநிலம் ஜமுய்

மாவட்டத்தின் கசாரி கிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்கு தலில் 12 பேர் பலி.

பிப்., 20: ஆந்திராவில் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி யாதைய்யா என்ற மாணவன் தீக்குளித்து பலியானார்.

பிப்., 21: பிப்ரவரி 25 முதல் 72 நாட் களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி அறிவிப்பு.

பிப்., 23: பெங்களூருவில் பழைய ஏர்போர்ட் ரோட்டில் உள்ள கார்ல்டான் டவர்ஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி.

பிப்., 25: மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு பின்பு, இந்திய - பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது.

பிப்., 27: பிரதமர் மன்மோகன் சிங் மூன்று நாள் அரசு முறை பயணமாக சவுதி பயணம்.



*****************************************************

உலகம்

*****************************************************



பிப்., 1: பாகிஸ் தானின் கராச்சி நகரில் இரு கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

பிப்., 2: ஈராக்கில் யாத்திரிகர்கள் கூட்டத்தில் புகுந்த தற்கொலைப்படையைச் சேர்ந்த பெண், வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 41 பேர் பலி.

பிப்., 3: அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு தென்மேற்கே கனெக்டிகட் நகரிலுள்ள மின் நிலையத்தில் மின்கலங்கள் வெடித்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலி.

பிப்., 21: பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான கோஹிஸ்தானில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவில் 102 பேர் பலி.

* போர்ச்சுகல் நாட்டில் மெடிரா தீவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி.

பிப்., 26: சீனாவின் தென் பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த வெடி விபத்தில் 17 பேர் பலி.

* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 6 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி.

சிலி பூகம்பம்:பிப்., 27: தென் அமெரிக்க நாடான சிலியின் மால் எனும் பகுதியில் பிப்., 27ம் தேதி, பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவானது. சுனாமி அலைகளும் ஏற்பட்டது. இதில் 800க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகின. உலக நாடுகள் பலவும் நிவாரண உதவிகளை மேற்கொண்டன. சிலி வரலாற்றில் 1960க்கு பிறகு நிகழ்ந்த மிகப் பெரிய பூகம்பமாக இது அமைந்தது. சுனாமியில் மக்கள் பலியாகும் சோகம் தொடர்கிறது.



மீண்டும் பேச்சுவார்த்தை: மும்பை தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாக்., நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. 14 மாதங்களுக்குப் பின் இரு நாடுகளின் வெளியுறவு செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தை பிப்., 25ம் தேதி நடந்தது.



பொன்சேகா கைது: இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா பிப்., 8ம் தேதி ராணுவத்தால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். பதவியை உதறி தேர்தலில் போட்டியிட்ட பொன்சேகா மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் ராஜபக்ஷே இந்நடவடிக்கையை மேற்கொண்டார். அவரை விடுதலை செய்யக் கோரி அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 'ஜனநாயக படுகொலை' என்று கைது நடவடிக்கைக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.



*****************************************************

விளையாட்டு

*****************************************************



பிப். 9: தாகாவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், 175 பதக்கங்களுடன் (90 தங்கம், 55 வெள்ளி, 30 வெண்கலம்) இந்திய அணி முதலிடம்.

பிப். 12: ஒலிம்பிக் போட்டிகளில், கிரிக்கெட்டுக்கு இடம் அளித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல். வரும் 2020 ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி களில் கிரிக்கெட் இடம் பெற உள்ளது.

பிப். 18: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 கணக்கில் சமன் செய்தது இந்தியா.

பிப். 24: டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரட் லீ ஓய்வு.

பிப். 27: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 கணக்கில் இந்தியா கைப்பற்றியது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us