தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விடாமுயற்சி!

விடாமுயற்சி!

விடாமுயற்சி!


PUBLISHED ON : நவ 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, புனித இஞ்ஞாசியார் உயர்நிலை பள்ளியில், 1973ல், 9ம் வகுப்பு படித்தேன். தமிழாசிரியையாக இருந்த ஏசுவடிவாள், ஒவ்வொரு மாணவியரின் திறனையும் நன்கு அறிந்து கற்பிப்பார். ஒருநாள் வகுப்பில், 'உன் அட்லஸ் புத்தகத்தை கொடு... ஒரு விபரம் அறிய வேண்டும்...' என்று திடீரென கேட்டார்.

பயத்தில் தலைகுனிந்தபடி நின்றேன். சற்று கோபத்துடன் புத்தகத்தை வற்புறுத்தி வாங்கி, என்னையும் அட்லஸ் புத்தகத்தையும் மாறி மாறி பார்த்தார் தமிழாசிரியை.

பின், மகிழ்ச்சி பொங்க, 'இவளது அட்லஸ் புத்தகத்தில் இருக்கும் உலக வரைபடத்தில், நம் நாட்டு பகுதிக்குள் சிவப்பு புள்ளிகள் இட்டு அவற்றை, ரேவதி நகர், ரேவதி பாலம், ரேவதி ஸ்துாபி என, அடையாளம் காட்டி இருக்கிறாள். இமயமலை உச்சியில் கொடி நட்டு, விமானம் பறப்பது போல் வரைந்து இருக்கிறாள். இது, அவளது தைரியத்தை காட்டுகிறது...' என பாராட்டினார்.

பின், 'லட்சியத்துடன் விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தால், எந்த துறையிலும் சிறக்கலாம்...' என அறிவுரைத்தார், தமிழாசிரியை.

என் வயது, 69. தமிழக மின்வாரியத்தில் வருவாய் மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். இமயமலையில் பயணம் செய்துள்ளேன். மூன்று நுால்கள் எழுதியுள்ளேன். பள்ளி நாட்களிலே இதுபோன்ற செயல்களுக்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்திய தமிழாசிரியை ஏசுவடிவாளை போற்றுகிறேன்.

- எஸ்.ரேவதி, விருதுநகர்.

தொடர்புக்கு: 94438 55108

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us