தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நடிகையின் கடிதம்!

நடிகையின் கடிதம்!

நடிகையின் கடிதம்!


PUBLISHED ON : நவ 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகை மாவட்டம், மஞ்சக்கொல்லை குமரன் உயர்நிலை பள்ளியில், 1974ல், 9ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...

பள்ளி இலக்கிய மன்றம் சார்பில் மாதந்தோறும் கூட்டங்கள் நடந்தன. அவற்றில் தவறாமல் பங்கேற்று மேடையில் ஏறி கணீரென பேசுவேன். இதை பார்த்த ஆசிரியர்கள், ஆண்டு விழாவில் ஓரங்க நாடகத்தில் நடிக்க வாய்ப்பு தந்தனர். பேச்சு, கட்டுரை போட்டிகளில் பங்கேற்க துாண்டினர். முயன்று பரிசுகளும் பெற்று வந்தேன்.

ஆர்வ மிகுதியால், 'வெண்ணிலா' என்ற கையெழுத்து பத்திரிகையை தொடங்கினேன். அதில், திரைப்படங்கள் பற்றிய விமர்சனம் எழுதுவதற்காக வகுப்பு நேரத்தை, 'கட்' அடித்து நாகப்பட்டினம் தியேட்டருக்கு செல்வேன். இதை அறிந்த தலைமையாசிரியர் நடன.குஞ்சிதபாதம் என்னை கண்டித்தார்.

நடிகர், நடிகையருக்கு கடிதம் எழுதுவேன். பெற்றோர் கண்டிப்பர் என்பதால் அவற்றில், பள்ளி முகவரியை குறித்திருந்தேன். அதன்படி நடிகை ஜெயசுதா, நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதங்கள், பள்ளி முகவரிக்கே வந்தன.

அதை கண்காணித்து கண்டிப்புடன், 'படிக்கும் போது இது வேண்டாம்... கற்பதில் கவனம் செலுத்து...' என, தடை போட்ட தலைமையாசிரியர் அறிவுரையை பின்பற்றி கவனமாக படித்தேன். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன்.

எனக்கு 65 வயதாகிறது. தனியார் பள்ளி நிர்வாக பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளி காலத்தில் வாழ்க்கை பாதை தடம்

மாறாமல், பக்கபலமாக இருந்து செம்மைப்படுத்திய தலைமையாசிரியர் நடன.குஞ்சிதபாதத்தை நன்றியோடு நினைவில் கொண்டுள்ளேன்.

- அ.அண்ணா அன்பழகன், சென்னை.

தொடர்புக்கு: 63805 59090

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us