தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொக்கிஷ தருணம்!

பொக்கிஷ தருணம்!

பொக்கிஷ தருணம்!


PUBLISHED ON : அக் 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, புரசைவாக்கம், சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளியில், 2007ல், 8-ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...

அன்று பள்ளியில் மாணவ - மாணவியர் திறன் குறித்த ஆய்வு நடந்தது. என் பங்களிப்பாக, 'குழந்தைத் தொழிலாளர்' என்ற கருப்பொருளில், பாவாடை, சட்டை அணிந்த சிறுமி, தலையில் செங்கற்கள் நிரம்பிய கூடையை சுமப்பது போல படம் வரைந்து காட்சிப்படுத்தி இருந்தேன்.

குழந்தை தொழிலாளர் இழப்பனவற்றை கல்வி, சமுதாயம், குடும்பச் சுமை, குழந்தைப் பருவம் என, ஒவ்வொரு செங்கலிலும் எழுதி இருந்தேன்.

படைப்புகளை ஆய்வு செய்த கல்வி அதிகாரி, என் படத்தை பார்த்ததும், 'யார் வரைந்தது...' என கேட்டார். பயம் கலந்து நின்றிருந்த என்னை நோக்கி சைகை செய்தார் வகுப்பாசிரியை ரஜினி. பதற்றத்துடன் அதிகாரி அருகில் சென்றேன்.

என் படத்தையும், ரெட்டை ஜடையில் சீருடையுடன் நின்றிருந்த என்னையும் மாறி மாறி பார்த்தபடி, 'ரொம்ப அழகா வரைஞ்சிருக்கீங்க... இன்னும் நிறைய வரையணும்...' என்றார் அதிகாரி. பெருமிதம் தந்த அந்த பாராட்டு, வரைவதிலும், சிந்தனையை அழகாக படைப்பதிலும் தீவிர ஆர்வத்தை ஏற்படுத்தியது. கல்லுாரியில் படித்த போது கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள் வெல்ல துாண்டியது.

என் வயது 29; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். பள்ளியில் பயத்தின் நடுவே ஆய்வு அதிகாரியிடம் பெற்ற பாராட்டு, எனக்குள் மிகப்பெரிய தன்னம்பிக்கையை விதைத்தது. வாழ்நாளில் மறக்க முடியாத, பொக்கிஷ தருணமாக அதை கருதுகிறேன்.

- கா.பானுபிரியா, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us