
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கர் வெப்பமண்டல காடுகளில் வாழும் அரியவகை பல்லி இனம் இலைவால் பாம்பு. இதன் உடல் தனித்தன்மையுள்ளது. இலை மற்றும் மரப்பட்டை போன்று தோற்றம் தரும். இதன் தோல், வால் மற்றும் உடல் அமைப்பு, உருமறைப்புக்கு ஏற்ற வகையில் உள்ளது. இயற்கையுடன் முழுமையாக ஒன்றி வாழ இது உதவுகிறது. எதிரிகளிடம் இருந்து எளிதாக தப்பிவிடுகிறது.
அதே நேரம் இரையை எளிதாக பிடிக்கவும் இந்த உருமறைப்பு உதவுகிறது. இந்த உயிரினம் இரவு நேரத்தில் தான் வெளியே வரும். பூச்சிகளை முதன்மை உணவாக உட்கொள்ளும். பலநாடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது. இதற்காக சட்டவிரோத கடத்தல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அழியும் நிலையில் இந்த உயிரினம் உள்ளது. இதை பாதுகாக்க மடகாஸ்கர் அரசு முயற்சி எடுத்து வருகிறது.
- வி.பரணிதா