
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
உளுந்து - 1.5 கப் பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன் கற்கண்டு - 1 கப் எண்ணெய், தண்ணீர் - தேவையான
அளவு.
செய்முறை:
பச்சரிசி, உளுந்தை தண்ணீரில், 30 நிமிடங்கள் ஊற வைத்து அரைக்கவும். கற்கண்டை பொடியாக்கி அதனுடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் மாவை வடையாக தட்டி போட்டு வேகவைத்து எடுக்கவும்.
சுவை மிக்க, 'கற்கண்டு வடை!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
- கே.முத்துாஸ், ராமநாதபுரம்.