உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 20, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
உலக கொசு ஒழிப்பு தினம்
உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசு மனிதர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மலேரியா, டெங்கு உள்பட பல நோய்களுக்கு கொசுக்களே காரணம். 'பிளாஸ்மோடியம்' ஒட்டுண்ணி, 'அனாபெலஸ்' பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இது ஒருவரை கடிப்பதன் மூலம் மலேரியா பரவுகிறது என்ற அறிவியல் உண்மையை 1897 ஆக., 20ல் கண்டுபிடித்தவர் பிரிட்டன் டாக்டர் ரொனால்டு ரோஸ். இந்த நாள், உலக கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவரது இந்த கண்டுபிடிப்புக்காக 1902ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
